About Templatezy

தெலுங்கு சினிமாவை மிரட்டிய தமிழ் வில்லன் ஆத்மா!

 

தமிழில், என்னை அறிந்தால், மீகாமன், கதகளி, நானும் ரெளடிதான், தெறி என பல படங்களில் நடித்தவர் வில்லன் நடிகர் ஆத்மா. தற்போது என்னோடு விளையாடு, பண்டிகை, தப்புத்தண்டா, மோர்மிளகா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த ஜனதா கேரேஜ் படத்தில் வில்லனாக நடித்து ஆந்திர சினிமாவை மிரட்டியிருக்கிறார் இந்த ஆத்மா.
ஜூனியர் என்டிஆருடன் நடித்தது பற்றி அவர் கூறும்போது, தமிழில் அஜீத், விஜய், ஆர்யா, விஷால், விஜயசேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து விட்டேன். இந்த படங்களில் எனது நடிப்பைப்பார்த்துதான் தெலுங்கில் ஜனதா கேரேஜ் பட வாய்ப்பு கிடைத்தது. ஜூனியர் என்டிஆர் படத்தில் வில்லன் வேடம் என்றதும் அதிக உற்சாகமடைந்து விட்டேன். காரணம் அவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும். மேலும், தெலுங்கிற்கு நான் புதிய வில்லன் என்றபோதும் அந்த படத்தில் நடித்த மூன்று வில்லன்களில் என்னை மிரட்டலான வில்லனாக காண்பித்தார்கள்.
அதோடு, ஜூனியர் என்டிஆர் சண்டை காட்சிகளில் நடித்தபோது எனக்கு நிறைய நடிப்பின் நுட்பங்களை சொல்லிக்கொடுத்தார். அது வளர்ந்து வரும் நடி கனான எனக்கு பெரிய உதவியாக இருந்தது. தெலுங்கில் நான் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் இப்போது மேலும் சில படங்களில் வில்லனாக நடிக்கவும் என்னிடம் பேசி வருகிறார்கள். அதனால், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான வில்லனாகிக் கொண்டிருக்கிறேன் என்று கூறும் ஆத்மா, சில படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்கிறேன். அது பர்பாமென்ஸ்ரீதியாக என்னை வித்தியாசப்படுத்திக்காட்ட நல்ல தொரு வாய்ப்பாக உள்ளது என்கிறார்
தெலுங்கு சினிமாவை மிரட்டிய தமிழ் வில்லன் ஆத்மா! தெலுங்கு சினிமாவை மிரட்டிய தமிழ் வில்லன் ஆத்மா! Reviewed by Unknown on 8:46 AM Rating: 5

No comments:

Powered by Blogger.